அயலான் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவான அயலான் திரைப்படம் ஜன.12 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.
கடந்த 4 ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்த இப்படம், விஎஃப்எக்ஸ் பணிகளை நம்பியே உருவாக்கப்பட்டது. நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியான அயலான் உலகளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையும் படிக்க: கோட் படத்தில் எதிர்நீச்சல் தொடர் நடிகை: வெளியான புகைப்படம்!
இந்த நிலையில், அயலான் திரைப்படம் வரும் பிப். 16 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.