கோப்புப்படம் 
செய்திகள்

தொடர் விடுமுறை: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7 படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் 7 தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. 

DIN

இந்த வாரம் திரையரங்குகளில் 7 தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. 

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவான ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் ஜனவரி 25 ஆம் நாள் உலகம் முழுவதும் வெளியாகிறது. 

எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படம் ஜன. 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் யோகி பாபுவின் தூக்குத்துரை திரைப்படம் மற்றும் சித்த மருத்துவர் வீரபாபு இயக்கி நடித்திருக்கும் முடக்கறுத்தான் திரைப்படம் வரும் ஜன. 25ஆம் தேதி வெளியாகிறது.

நடன இயக்குநர் தினேஷ் மற்றும் யோகிபாபு நடித்துள்ள லோக்கல், நவீன்குமார் சந்திரன் இயக்கி நடித்துள்ள நியதி, த. நா. என்ற திரைப்படம் குடியரசு நாளை முன்னிட்டு ஜன. 26 ஆம் தேதி வெளியாகிறது.

மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் நடிகர் மோகன் லால் நடித்துள்ள  ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் வருகிற ஜன.25 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

தீராக் கனவுகள்... கேப்ரியல்லா

கொளுத்தும் வெயில்... நேஹா மாலிக்

SCROLL FOR NEXT