செய்திகள்

டோவினோ தாமஸின் ‘நடிகர் திலகம்’ பெயர் மாற்றம்! காரணம் யார் தெரியுமா? 

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடித்துள்ள நடிகர் திலகம் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

DIN

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடித்துள்ள நடிகர் திலகம் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

மலையாளத்தில் 2012இல்  துணை நடிகராக அறிமுகமான டோவினோ தாமஸ் பின்னர் முக்கியமான நடிகராக வளர்ந்துள்ளார். இவரது ‘மின்னல் மிரளி’ படம் உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. மாயநதி, தீவண்டி, மாரடோனா, லூக்கா, வைரஸ், கல, 2018 ஆகிய படங்கள் மிகவும் கவனிக்கப்பட்டன. 

அதிலும் ‘2018’ படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்க அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 

இவர் நடித்துள்ள 'நடிகர் திலகம்' படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.  இந்தப் படத்தினை பிரபல நடிகர் லாலின் மகன் ஜுன் பால் லால் இயக்கியுள்ளார். பிரபல தமிழ் நடிகர் சிவாஜியின் ரசிகர்கள் இந்தப் படத்தின் தலைப்புக்கு வருத்தம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. 

இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ழ்சியில் சிவாஜியின் மகன் பிரபு, பேரன் விக்ரம் பிரபு கலந்து கொண்டனர். இதில் நடிகர் பிரபு, “இப்படி ஒரு படம் எடுப்பது எங்களுக்கு தெரியாது. ரசிகர்கள் சிலர் கூறித்தான் தெரியும். இது குறித்து லாலிடம் கேட்டபோது அவரது மகன்தான் இதை இயக்குவதாக கூறினார். முடிந்தால் இந்தப் படத்தின் தலைப்பினை மாற்றுமாறு படக்குழுவிடம் கேட்டேன். படத் தலைப்பை மாற்ற நாங்கள் வற்புறுத்தவில்லை. ஆனால் அவர்களது மறுமொழி குறித்து மகிழ்ச்சியடைகிறேன்” எனப் பேசியிருந்தார். 

இந்நிலையில் படத்தின் பெயர் ‘நடிகர்’ என மாற்றப்பட்டுள்ளது. இதைப் பகிர்ந்த நடிகர் டோவினோ தாமஸ், “புதிய தலைப்பு, அதே அற்புதமான கதை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

SCROLL FOR NEXT