செய்திகள்

ரசிகர்களின் பேராதரவில் ப்ளூ ஸ்டார்! 

நடிகர் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன. 

DIN


இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.

இதனை நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாரான இப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. 

இதனைத்தொடர்ந்து, அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியனின் திருமணத்தை முன்னிட்டு ‘ரயிலின் ஒலிகள்’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இப்பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

அடுத்து வெளியான இரண்டாவது பாடலான ‘அரக்கோணம் ஸ்டைல்’ என்கிற பாடலும் ஹிட்டடித்து. கோவிந்த் வசந்தா இசையில் அறிவு பாடிய இப்பாடல் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இந்நிலையில், படம் இன்று (ஜன. 25) வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. நடிகர் அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் பதிவினை ரீபோஸ்ட் செய்து வருகிறார். 

அசோக் செல்வன், சாந்தனு தவிர்த்து பல கதாபாத்திரங்கள் நினைவில் நிற்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

80'ஸ் ரீயூனியன்!

தமிழ்நாட்டில் அக். 11 வரை மழைக்கு வாய்ப்பு!

அடைமழையால் கடும் வெள்ளம்! அடித்துச்செல்லப்பட்ட கார்கள்!

சேட்டன் ஆன் தி வே... சௌபின் சாஹிர்!

SCROLL FOR NEXT