செய்திகள்

’மயில்போல பொண்ணு ஒன்னு..’ பாடலுடன் மகளுக்கு விடைகொடுத்த இளையராஜா!

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

DIN

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி (47) உடல்நலக் குறைவு காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை (ஜன.25) உயிரிழந்தாா். 

தியாகராய நகா் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பவதாரணியின் உடல் வைக்கப்பட்டு பின், இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமம், லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே இளையராஜா கட்டியுள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்துக்கு பவதாரணியின் உடல் கொண்டு வரப்பட்டு இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. 

நல்லடக்கம் செய்வதற்கு முன், பவதாரிணி பாடிய ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலைக் குடும்பத்தினர் பாடினர். அதில், இளையராஜாவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிலர் இணைந்து பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாரதி படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற, ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலைப் பவதாரிணி பாடியிருந்தார். இப்பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT