செய்திகள்

கடையின் பெயரில் ஒளிபரப்பாகும் இன்னொரு புதிய சீரியல்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கிடைத்த வரவேற்பால் தற்போது இத்தொடரின் 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலைத் தொடர்ந்து கடையின் பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

அந்தத் தொடருக்கு சிவமுருகன் டெக்ஸ்டைல்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகர் - நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விஜய் தொலைக்காட்சியில் அதிக ஆண்டுகள் (5 ஆண்டுகள்) ஒளிபரப்பான சாதனைக்கு உரிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் தொலைக்காட்சியில் இதுவரை எந்தத்தொடரும் 5 ஆண்டுகள் ஒளிபரப்பானதில்லை என்பதால், இத்தொடர் தனி மதிப்பைப் பெற்றுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கிடைத்த வரவேற்பால் தற்போது இத்தொடரின் 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரும் பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 

இதேபோன்று கடையின் பெயரில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை ரேஷ்மா முரளிதரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடையின் பெயரில் தற்போது புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. அந்தத் தொடருக்கு சிவமுருகன் டெக்ஸ்டைல்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

பெயரை வைத்தே இது துணிக்கடை வைத்திருப்பவர்கள் மற்றும் அதில் பணிபுரிபவர்கள் பற்றிய கதை என்பதை ரசிகர்களால் கணிக்கமுடிகிறது. 

நடிகர் சிபு சூர்யன் - நடிகை வைஷ்ணவி

இந்தத் தொடரில் நாயகியாக நடிகை வைஷ்ணவி நடிக்கவுள்ளார். இவர் பேரன்பு தொடரில் நாயகியாக நடித்தவர். அவருக்கு ஜோடியாக நடிகர் சிபு சூர்யன் நடிக்கவுள்ளார். இவர் ரோஜா, பாரதி கண்ணம்மா -2 ஆகிய தொடர்களில் நாயகனாக நடித்தவர். 

மகராசி, சில்லுனு ஒரு காதல், ஈரமான ரோஜாவே ஆகிய தொடர்களில் நடித்த நடிகர் நிவின் இவர்களுடன் நடிக்கவுள்ளார். இந்தத் தொடரின் முன்னோட்ட விடியோ மற்றும் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

குண்டா் தடுப்புக் காவலில் இளைஞா் கைது

விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மொபெட் மீது காா் மோதல்: முதியவா் மரணம்

கஞ்சா விற்பனை: 4 போ் கைது

SCROLL FOR NEXT