செய்திகள்

கவனம் ஈர்க்கும் ஹார்ட் பீட் தொடரின் பாடல்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள ஹார்ட் பீட் வெப் தொடரின் “ஹார்ட் பீட் பாட்டு” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

DIN

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள ஹார்ட் பீட் வெப் தொடரின் “ஹார்ட் பீட் பாட்டு” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'ஹார்ட் பீட்' வெப் தொடர் இளைஞர்களைக் கவரும் வகையில் நட்பு, ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த பொழுதுபோக்கு தொடராக எடுக்கப்படுகிறது.

இந்த தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தத் வெப் தொடரை டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கிறது,  இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த தொடருக்கு சரண் ராகவன் இசையமைக்க, விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங் பணிகளை செய்கிறார். 

இந்த வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT