செய்திகள்

தனுஷ் - 51 படத்தின் பெயர் இதுவா?

சேகர் கமூலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள திரைப்படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளது.

இப்படத்திற்குப் பின் தனுஷ் இயக்கி, நடித்த அவரின் 50-வது படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள அவரது 51-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

இப்படத்தை இயக்குநர் சேகர் கமூலா இயக்குகிறார். நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.பான் இந்தியப் படமாக இது உருவாகிறது. 

இந்நிலையில், இப்படத்திற்கு ‘தாராவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்கள் அதிகம் உள்ள மும்பை தாராவியை மையமாகக் கொண்ட கதையாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT