செய்திகள்

காந்தாரா - 2 பிரம்மாண்ட செட்!

ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாக உள்ள காந்தாரா - 2 படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாகத் தகவல்.

DIN

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.

கன்னட  வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

தொடர்ந்து, காந்தாரா படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காலத்துக்கு முன் நடக்கும் கதையாக உருவாகும் காந்தாரா - 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

மங்களூருவில் பிரம்மாண்ட செட் அமைத்து அதிக செலவில் எடுக்கப்பட்டு வரும் ‘காந்தாரா சேப்டர் 1’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கு கிரின் மேட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு கிராபிக்ஸ் காட்சிகளும் அதிகம் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. இதற்காக, பெரும்பாலான காட்சிகளை ஸ்டூடியோவில் எடுக்கவும் திட்டமிட்டு வருகிறார்களாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவைப்பட்டால் கூட்டணி குறித்து OPSயிடம் பேசுவேன்! |செய்திகள் : சில வரிகளில் | 29.1.26

இந்த வார ஓடிடி படங்கள்!

”நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம்!” OPS குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

நியூசி.க்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?

செங்காத்தக்குளத்தில் அறிவுசார் நகரம்!அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

SCROLL FOR NEXT