நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் சலார் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாகவும் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தி்லும் நடித்திருந்தனர்.
சலார் திரைப்படம் கடந்த ஆண்டு டிச. 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.600 கோடி வரை வசூலித்தது. இப்படம் ஜனவரி மாதம் ஓடிடியில் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படமும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சலார் - 2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை ஆகஸ்ட் 10 ஆம் தேதி துவங்க இயக்குநர் பிரசாந்த் நீல் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.