செய்திகள்

அதுல்யாவின் பாஸ்போர்ட்டை திருடிய பணிப்பெண்!

DIN

நடிகை அதுல்யாவின் பாஸ்போர்ட்டை திருடியதாக பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘பால்வாடி காதல்’ எனும் குறும்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. 

இவரது முதல் படம் 'காதல் கண் கட்டுதே' 2017-ல் வெளியானது. தொடர்ந்து ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ், எண்ணித் துணிக என பல படங்களில் நடித்திருந்தார்.

முன்னணி நடிகையாக இல்லையென்றாலும் தனக்கென ரசிகர்களை வைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு கவனம் பெறுவார். கோவையைச் சேர்ந்த இவர் வடவள்ளியில் தன் தாயுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், வீட்டிலிருந்த அதுல்யாவின் பாஸ்போர்ட் காணாமல்போக உடனடியாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். விசாரணையில், அதுல்யா வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் பாஸ்போர்ட்டை திருடியது தெரியவந்தது.

தனக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை முறையாகத் தராததால், அதுல்யா வெளிநாடு செல்வதைத் தடுக்கவே பாஸ்போர்ட்டை திருடியதாக பணிப்பெண் கூறியதாகவும் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT