நடிகை த்ரிஷா 
செய்திகள்

த்ரிஷாவின் முதல் இணையத்தொடர்...! ஓடிடி தேதி அறிவிப்பு!

நடிகை த்ரிஷா முதன்முதலாக நடித்துள்ள இணையத்தொடர் ஓடிடியில் வெளியாகவிருக்குறது.

DIN

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் முன்னணி நடிகையாக பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா. விஜய்யுடன் நடித்த லியோ திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வருகிறார். தற்போது கமல் (தக் லைஃப்), அஜித் (விடா முயற்சி) படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் முதன்முறையாக இணையத்தொடரில் நடித்துள்ளார். பிருந்தா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் பல மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

இந்தத் தொடரினை சூர்யா மனோஜ் வங்கலா இயக்கியுள்ளார். இதில் இந்திரஜித் சுகுமார், ஜெயபிரகாஷ், ரவீந்திர விஜய் நடித்துள்ளார்கள். த்ரில்லர் தொடராக உருவாகியுள்ள இதில் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்

திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT