படம் | லைகா எக்ஸ் தளம்
செய்திகள்

இந்தியன் 2 சிறப்புக் காட்சிக்கு அனுமதி!

காலை 9 மணிக்குதான் முதல் காட்சி தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 28 ஆண்டுகள் கழித்து வெள்:ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் கமலுடம், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தியன் 2 சிறப்புக் காட்சியை திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி கோரி லைகா தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தமிழக அரசிடம் முறையிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு நிபந்தனைகளுடன் சிறப்புக் காட்சியை திரையிடுவதற்கு நாளை ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

காலை 9 மணிக்குதான் முதல் காட்சி தொடங்க வேண்டும் என்றும் நள்ளிரவு 2 மணிக்கு கடைசி காட்சியை முடித்துவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு திரையில் அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உரிய போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி ஒளிபரப்புவதற்கு இடையே சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற போதிய நேரம் ஒதுக்கவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT