செய்திகள்

ஆதி நெருப்பே.. கங்குவா முதல் பாடல்!

DIN

கங்குவா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இதில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடித்துள்ளனர்.

மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு பாகங்களாகத் தயாராகிறது. முதல் பாகம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கங்குவா படத்தின் முதல் பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஃபயர் சாங் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை விவேகா எழுத, விஎம் மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ், தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாதகப்படி ஒருவர் எந்த நிறத்தை ஆடை, வண்டி வாகனத்திற்கு பயன்படுத்தலாம்?

தணல் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஆந்திரத்தின் உணவைப் போல முதலீடுகளும் காரம்தான்! நாரா லோகேஷ் கிண்டல்?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் கலக்கலான படங்கள்!

“ஏஐ-னு சொல்றாரு பா.. மேனேஜர்” இணையத்தை கலக்கும் தீபாவளி பரிசு!

SCROLL FOR NEXT