ரூ.9 கோடியில் ஃபெராரி கார் வாங்கிய அஜித்?
நடிகர் அஜித்குமார் புதிய ஃபெராரி கார் ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்கிற இரு படங்களில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதில், விடாமுயற்சி படத்திற்கான அஜர்பைஜான் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் முடிவடைந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
Advertisement
இந்த நிலையில், அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்த பின், நடிகர் அஜித்குமார் ரூ.9 கோடி மதிப்புள்ள ஃபெராரி கார் ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கார் பிரியரான அஜித், விடாமுயற்சி படப்பிடிப்பின்போது ஓய்வு நாள்களில் பந்தயக் கார்களை ஓட்டியது குறிப்பிடத்தக்கது.