நடிகை அஞ்சலி 
செய்திகள்

நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!

நடிகை அஞ்சலி தெலுங்கு இணையத் தொடர் ஒன்றில் நெருக்கமான காட்சிகளில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.

DIN

கற்றது தமிழ், அங்காடி தெரு, தம்பி வெட்டோத்தி சுந்தரம், இறைவி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் நடிகை அஞ்சலி.

எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றவர் இன்றும் நல்ல கதாபாத்திரங்களில் முழுமையான நடிப்பை வழங்கி வருகிறார்.

தமிழில் கதைநாயகியாக ’ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடித்த கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

தற்போது, தன் 50-வது படமான ‘ஈகை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார்.

39 வயதாகும் அஞ்சலி பக்‌ஷிகரனா என்ற இணையத் தொடரில் நடித்துள்ளார். இது ஜீ5 ஓடிடி தளத்தில் ஜூலை 19ஆம் தேதி வெளியாகியுள்ளது.

பக்‌ஷிகரனா போஸ்டர்.

இந்தத் தொடரில் அஞ்சலி அந்தரங்க காட்சிகளில் நடித்துள்ள காட்சிகள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில், “பல ஆண்களுக்கு மத்தியில் இப்படியான காட்சிகளில் நடிப்பது சிரமம். அந்தக் காட்சியை படமாக்கும்போது அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு படமாக்கினார்கள். அந்தக் காட்சி நடிக்கும்போது மிகவும் கூச்சமாகவும், பதட்டமாகவும் இருந்தது.

என்னுடைய கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறேன். நான் நடித்த எல்லா கதாபாத்திரங்களுக்கும் நினைத்ததைவிட நல்ல பெயர் கிடைத்திருக்கின்றன.

வழக்கமான கதாபாத்திரங்களில் நடிப்பது சலிப்படைகிறது. அதனால் எனது ஓடிடி படங்களில் எனக்கு பிடித்தமாதிரி நடிகையாக என்னை மெருகேற்றும் படங்களில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT