நடிகைகள் சமந்தாவும், தமன்னாவும் முன்னணி நடன நடிகைகளாக உள்ளனர்.
திரைப்பட பாடல்களின் பரிசோதனை முயற்சிகளுக்கான பட்டியல் நீண்டது. சினிமா அறிமுகமான காலகட்டத்தில் மொத்த படமும் அதன் பாடல்களும் ஸ்டுடீயோவிற்குள்ளே எடுக்கப்பட்டன.
பின், இசை உலகில் ஏற்பட்ட புரட்சி, ஹாலிவுட் படங்களின் மோகம் என 1970-களின் இறுதிகளிலே இந்திய சினிமாவில் டிஸ்கோ நடனக் காட்சிகள் அதிகமாக இடம்பெறத் துவங்கின. கவர்ச்சியான அப்பாடலுக்கு அதற்கென நடிகைகள் உருவாகினர். அப்படி உருவானவர்களில் ஒருவரே நடிகை சில்க் ஸ்மிதா.
ஆனால், 90-களின் இறுதியை நெருங்கியபோது முன்னணி நடிகையாக இருந்து மார்க்கெட் இழந்த நடிகைகளே கவர்ச்சி பாடல்களுக்கு மட்டும் நடனமாடி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று மீண்டும் சினிமாவிற்குள் ஜொலித்த கதைகளும் உண்டு.
இன்று, நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. பான் இந்தியா படங்களின் வருகையால் இந்தியளவில் தெரிந்த முன்னணி நடிகைகளே இந்தக் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாட அழைக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை சமந்தா. புஷ்பா படத்தில் அவர் நடனமாடிய, ‘ஊ சொல்றியா..’ பாடல் ஒலிக்காத இடமே இல்லை என்கிற அளவுக்கு ஹிட் அடித்தது. அந்த ஒரு பாடலுக்கு மட்டும் ரூ.5 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார் சமந்தா.
புஷ்பாவின் வணிக வெற்றிக்கு அப்பாடலும் ஒரு காரணமாக அமைந்ததால், இன்று பெரிய பட்ஜெட்டில் உருவாகும் கமர்சியல் படங்களில் தவறாமல் இப்படியான பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. சமந்தாவை பலரும் அணுக முயற்சித்தாலும், உடல் நலம் காரணமாக அவர் விலகிய நேரத்தில் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் மூலம், ‘நான் இருக்கிறேன்’ என களத்தில் குதித்தார் நடிகை தமன்னா.
அந்தப் பாடலின் வெற்றிக்குப் பின் தமன்னாவையே சிறப்பு நடனத்திற்காக பலரும் அழைத்து வருகின்றனராம். சமீபத்தில், தமன்னா நடனத்தில் வெளியான, ஆஜ் கி ராத் (aaj ki raat) பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடலுக்கு மட்டும் தமன்னா ரூ.3 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, பாலிவுட்டில் சன்னி லியோன், நேரா பதாகி, கரீனா கபூர் ஆகியோரே ஒரு பாடலுக்கு நடனமாட அதிக சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது சமந்தாவும், தமன்னாவும் அதிரடியாக அந்த இடத்தைப் பிடித்திருக்கின்றனர். இருவரும், தென்னிந்தியளவில் முன்னணி நடிகைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.