யுவன் தயாரிப்பில் ஸ்வீட்ஹார்ட்!
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பியார் பிரேம காதல், ஹை ஆன் லவ், விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.
பியார் பிரேம காதல் படத்தைத் தவிர மற்ற படங்கள் வணிக ரீதியான வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தயாரித்த அனைத்து படங்களும் ரசிக்கக்கூடிய வகையிலேயே உருவாகியிருந்தன.
இந்த நிலையில், யுவனின் ஒய்எஸ்ஆர்(YSR) நிறுவனம் புதிய படத்தை தயாரிக்க உள்ளது. இதில், நாயகனாக நடிகர் ரியோ ராஜ் நடிக்க அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்குகிறார். படத்திற்கு, ‘ஸ்வீட்ஹார்ட்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
காதல் திரைப்படமாக உருவாகும் இதில் கோபிகா ரமேஷ் நாயகியாகவும் ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.