செய்திகள்

அஜித் படத்தில் இணைந்த பிரபலங்கள்!

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்த நடிகர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன், போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

தற்போது, குட் பேட் அக்லியின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், குட் பேட் அக்லியில் பிரேமலு படத்தில் நாயகனாக நடித்த நஸ்லன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

பெய்ஜிங் சென்றார் ஜெர்மனி பிரதமர்! ஐரோப்பிய நாடுகளுடன் வலுக்கும் சீனாவின் கூட்டணி!

1800 பேருக்கு வேலைவாய்ப்பு! திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்!

யூடியூபில் வெளியானது மரியா!

SCROLL FOR NEXT