செய்திகள்

கியாரா அத்வானியின் க்ரஷ் விஜய் தேவரகொண்டா! கிண்டல் செய்யும் ராம் சரண், ராணா டகுபதி!

தெலுங்கு பிரபலங்களான ராம் சரண், ராணா டகுபதி கியாரா அத்வானியை கிண்டல் செய்கிறார்கள்.

DIN

‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் மூலம் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி பிரபலமானார். அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமிக்கிலும் நடித்து புகழ் பெற்றார்.

லஸ்ட் ஸ்டோரிஸ், கோவிந்த நாம் மேரா, சத்ய பிரேம் கதா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கேம் சேஞ்சர், வார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

2023இல் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் திருமணம் நடைபெற்றது. நடிகர் விஜய் தேவரகொண்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் நடிகர் ராம் சரண் கியாரா அத்வானி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் ராணா டகுபதி தொகுத்து வழங்கினார். அதில் ராம் சரண், “கியாரா என்னிடம் நான் விஜய் தேவரகொண்டாவின் மிகப்பெரிய ரசிகர் . எப்போதாவது இரவு உணவு உண்ண வீட்டிற்கு அழைத்தால் விஜய் தேவரகொண்டா வருவாரா எனக் கேட்பார்” என்றார்.

ராணா டகுபதி விஜய் தேவரகொண்டாவின் நண்பர் என்பதால் தன்னை விஜய்யிடன் அறிமுகப்படுத்தும்படி கியாரா கேட்டுள்ளதாக கூறினார். இப்படியாக மாறி மாறி ராம் சரணும் ராணா டகுபதியும் கியாரா அத்வானியை கிண்டல் செய்கிறார்கள்.

சில விளம்பரங்களில் கியாரா அத்வானியும் விஜய் தேவரகொண்டாவும் நடித்திருந்தாலும் இன்னும் ஒன்றாக இணைந்து படம் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT