முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு வில்லனான சஞ்சய் தத்!

Updated On : 7 ஜூன், 2024 at 7:57 AM
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயனின் படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடிக்கிறார்.

தமிழ் திரையுலகின் தற்போதைய வசூல் நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், 'மெரினா' படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார்.

தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இப்படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் கலந்துகொண்டு ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், எஸ்கே - 21 படத்தின் வில்லன் சஞ்சய் தத் என்பது உறுதியாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இறுதியாக, தமிழில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது, சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →