முகப்பு
செய்திகள்

மகாராஜா முதல்நாள் வசூல்!

Updated On : 15 ஜூன், 2024 at 2:49 PM
பகிர்:

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது.

விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கில் தயாரான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கமும் நடிகர்களின் நடிப்பும் பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் முதல்நாளில் ரூ.4.75 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வார இறுதியில் இப்படம் ரூ.15 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.