செய்திகள்

மலையாளப் படங்களில் பெண்களின் முக்கியத்துவம் குறைகிறதா? பார்வதியின் அதிரடி பதில்!

நடிகை பார்வதி மலையாள சினிமாவில் பெண்கள் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்.

DIN

மலையாள நடிகை பார்வதி தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தனுஷுடன் மரியான் படத்தில் நடித்திருந்தார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை பார்வதிக்கு டேக் ஆஃப் எனும் மலையாளப் படத்துக்கு தேசிய விருதும் கேரள அரசின் மாநில விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். பா. ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

லீனா மணிமேகலை இயக்கத்தில் சைபர் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் படத்திற்கு ‘தன்யா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை கிராமிய விருது பெற்ற தயாரிப்பாளர் அபூர்வா பக்‌ஷி இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். 2022இல் அறிவிக்கப்பட்டு இன்னும் இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் மலையாள சினிமாவில் பெண்களுக்கான முக்கியத்துவம் பற்றி பார்வதி பேசியதாவது:

மலையாளத்தில் கதைகள் ஆண்களை மையப்படுத்தி மட்டுமே வருவது உண்மை. ஆனால் அதற்காக பெண் கதாபாத்திரங்களை தேவையின்றி நுழைக்கமுடியாது. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தங்களுக்கு பிடித்த கதைகளை எடுக்கிறார்கள். அவர்களிடம் வெளியீட்டு உரிமம் இருப்பதால் இதை மறுக்கமுடியாது.

இயக்குநர்களிடம் எதிர்பார்ப்பதை விடவும் சொந்தமாகவே நாம் படம் எடுப்பதில் கவனம் செலுத்தலாம். இந்த விமர்சனங்களை யாரிடம் கேட்கிறோம் என்பது முக்கியம். நான் நடிகை. நான் இயக்குநர் ஆனாலும் யாரோ ஒருவர் தயாரிப்பாளரின் கீழ்தான் இருப்பேன். அதனால் அந்த முடிவை எடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை.

வேண்டுமென்றே பெண்கள் மையப்படுத்திய படங்களை ஒதுக்கிறார்களா என்று கேட்டால் ஆமாம் என்றே சொல்ல வேண்டும். முன்பு ஒரு காலம் இருந்தது. அப்போது பெண்ணியவாதிகள் சமூக செயல்பாட்டாளர்கள் வைரலாக இருந்தார்கள். தற்போது இது குறித்த உரையாடல்களில் இருந்து பலரும் அமைதியாக கடந்துவிட்டார்கள் என்பதே நிதர்சனம் என்றார்.

நடிகை ஊர்வசியுடன் இணைந்து பார்வதி புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு உள்ளொழுக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை ஆர்எஸ்விபி தயாரிக்க கிரிஸ்டோ டாமி இயக்க சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

”வறுமையால் உறுப்பை விற்கும் குடும்பங்களின் மனநிலை..!” My Lord படம் குறித்து இயக்குநர் ராஜு முருகன்!

கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷின் மெண்டல் மனதில் பட முதல் பாடல்!

தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அபிஷேக் சர்மா..! இஷான், பிரெவிஸ், ஃபர்ஹான் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT