ரசவாதி ஓடிடி தேதி!
ரசவாதி திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவான படம் ரசவாதி. சித்த வைத்தியரான சதாசிவ பாண்டியன் (அர்ஜுன் தாஸ்) சந்திக்கும் பிரச்னைகளே படத்தின் கரு.
திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால், வில்லனாக நடித்த சுஜித் சங்கர் கவனம் பெற்றார்.
Advertisement
Advertisement
தற்போது, ரசவாதி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வருகிற ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.