10 ஆண்டுகளுக்குப் பின்... நயன்தாராவுடன் நஸ்ரியா!
நடிகை நஸ்ரியா, நடிகை நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட நிலையில், நடிகர் ஃபகத் ஃபாசிலைத் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார். அவ்வபோது, சில படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
தற்போது, நடிகர் பாசில் ஜோசஃப்க்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.
Advertisement
அதேபோல், நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாக இருப்பதுடன் நடிப்பிலும் கவனம் செலுத்துகிறார்.
இந்த நிலையில், நஸ்ரியா - ஃபகத் இணையும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணையும் சந்தித்துள்ளனர். அப்போது, இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நஸ்ரியா வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த பதிவில் , “இறுதியாக.. இந்த நாளுக்காக இவ்வளவு காலம் எடுத்தது எது?” என்றதுடன் 10 ஆண்டுகள் கழித்து என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
நஸ்ரியாவும், நயன்தாராவும் இணைந்து நடித்த ‘ராஜா ராணி’ திரைப்படம் 2013 -ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது. அதன் பிறகு, இருவரும் இப்போதுதான் சந்தித்துக் கொள்கிறார்கள் எனத் தெரிகிறது.