நடிகர் டமாயோ பெர்ரி 
செய்திகள்

கடல் சாகசத்தில் ஈடுபட்ட ஹாலிவுட் நடிகர் சுறா கடித்து பலி!

அலை சறுக்கல் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது விபரீதம்!

DIN

’பிரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ திரைப்படத்தில் நடித்து உலக அளவில் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் டமாயோ பெர்ரி.

கடல் சாகசப் பிரியரான இவர், கடலில் அலையின் வேகத்துக்கு ஏற்ப அலையில் சறுக்கி விளையாடும் கடல் ஸர்பிங் சாகசத்தில் பயிற்சி பெற்றவர். பல்வேறு கடல் சாகசங்களை மேற்கொள்வதில் அதீத ஆர்வமுடையவரும் கூட.

இந்த நிலையில், ஹவாய் தீவிலுள்ள கோட் தீவில் கடந்த ஞாயிறன்று(ஜூன் 23) பகலில் அலை சறுக்கல் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரை சுறா மீன் கடித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கடலில் உயிருக்கு போராடியபடி ஒரு நபர் துடித்துக் கொண்டிருந்ததைக் கண்ட சிலர், ஹோனலூலு காவல்துறைக்கும் கடல் பாதுகாப்புப் படைக்கும் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய டமாயோ பெர்ரியை கரைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சையளித்துள்ளனர்.

எனினும், அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டதாக ஹோனலூலு காவல்துறை மற்றும் கடல் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை(ஜூன் 24) தெரிவித்துள்ளனர்.

’பிரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ திரைப்படத்தில் டமாயோ பெர்ரி

ப்ளூ கிரஷ், ஹவாய்-ஓ ஆகிய படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்த டமாயோ பெர்ரிக்கு வயது 49.

டமாயோ பெர்ரியின் மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் டமாயோ பெர்ரி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT