பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 
செய்திகள்

இறுதிப் போட்டியை இந்த காரணத்தால் பார்க்கவில்லை: நடிகர் அமிதாப் பச்சன்

இந்தியாவின் வெற்றிக்காக தொலைக்காட்சி அணியை பார்த்து பார்க்கவில்லை: அமிதாப் பச்சன்

DIN

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்க்கவில்லை என தான் பார்க்கவில்லை என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் பரபரப்பான கடைசி த்ரில் ஓவரில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா. இதன் மூலம் 13 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவேறியது.

இந்திய கிரிக்கெட் அணியின் இந்த அபார வெற்றியைக் கொண்டாடும் விதமாக பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்க்கவில்லை என தான் பார்க்கவில்லை என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

நான் பார்த்தால் இந்தியா தோற்றுவிடும் என்பதாலேயே பார்க்கவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் இந்திய அணி வென்றதை அறிந்து கண்ணீர் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் ஆட்டத்தை அமிதாப் பச்சன் பார்த்தால் அந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றுவிடும் என்கிற தோற்றம் ஒன்று உலவி வருகிறது.

இதன் காரணமாக நேற்று நடந்த உலக்கோப்பை இறுதி ஆட்டத்தை பார்க்க வேண்டாம் என அமிதாப் பச்சனிடம் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று அவரும் இறுதி ஆட்டத்தை பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியக்க வைக்கும் விஎஃப்எக்ஸ்... மிராய் டிரைலர்!

தில்லி பிரீமியர் லீக்: அறிமுகப் போட்டியில் அசத்திய ஆர்யவிர் சேவாக்!

ஹரியாணாவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித்தொகை!

சிங்க்ஃபீல்டு கோப்பையை வென்ற வெஸ்லி: ஜிசிடி இறுதிப் போட்டிக்குத் தேர்வான பிரக்ஞானந்தா!

பொறியியல் கலந்தாய்வு: கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை! 81% மாணவ சேர்க்கை!

SCROLL FOR NEXT