செய்திகள்

மறைமுகமான ஆதாரப்புள்ளி: கமல்ஹாசன் பகிர்ந்த தத்துவம்!

நடிகர் கமல்ஹாசன் பதிவிட்ட புதிய புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

DIN

நடிகர் கமல்ஹாசன் பதிவிட்ட புதிய புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படம் முடியும் தருவாயில் இருக்கிறது. கமலின் 234வது படமான தக் லைஃப் படத்தினை மணிரத்னம் இயக்குகிறார். 237வது படத்தினை சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் சகோதரர்கள் இயக்குகிறார்கள்.

கமல்235, 236 படங்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கும் படம் 235ஆவதாக இருக்கலாம் அல்லது கல்கி 2898 படம் இருக்கலாம் எனவும் 236வது படத்தினை லோகேஷ் இயக்குவாரெனவும் தகல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடிகர் கமல் புதிய புகைப்படத்தினை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில் கேமிராவுடன் கையில் அலைபேசியுடனும் தாண்டுவது போன்ற ஸ்டைலான புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது:

எனக்கும் என்னைப்போன்றவர்களுக்கும் “கலந்துகொள்வதன் மூலமாக கற்றுக்கொள்வது” பல விசயங்களை வேகமாக கற்றுக்கொடுகிறது. அதனால் முடிந்த அளவுக்கு தாண்டுகிறேன். இந்த மறைமுகமான ஆதாரப்புள்ளி நமது எடையை உள்புறமாக இழுக்கிறது எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT