DOTCOM
செய்திகள்

சலார் - 2 படப்பிடிப்பு எப்போது?

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் சலார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாகவும் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தி்லும் நடித்திருந்தனர்.

சலார் திரைப்படம் டிச. 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.600 கோடி வரை வசூலித்தது. இப்படம் ஜனவரி மாதம் ஓடிடியில் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதால் ஏப்ரல் மாதம் சலார் - 2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை துவங்க இயக்குநர் பிரசாந்த் நீல் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாங்கள் வந்தவுடன் தில்லியே பயப்படுகிறது! - காவல்துறை மீது மமதா குற்றச்சாட்டு

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!

சுற்றுலா மாநாடு: 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சொல்லப் போனால்... எங்கே செல்லும் இந்தப் பாதை?

SCROLL FOR NEXT