dinamani
செய்திகள்

72வது பிறந்தநாள் கொண்டாடும் சின்னத்திரை மூத்த நாயகி!

எதிர்நீச்சல் தொடரின் நாயகி மதுமிதா புகைப்படம் பதிவிட்டு சத்யப்பிரியாவுக்கு வாழ்த்து.

DIN

எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகை சத்யப்பிரியா இன்று தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் தொடரின் நாயகி மதுமிதா புகைப்படம் பதிவிட்டு சத்யப்பிரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எதிர்நீச்சல் நாயகி மதுமிதா, இயக்குநர் திருச்செல்வத்துடன்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனின் தாயாக நடிகை சத்யப்பிரியா நடித்து வருகிறார். 2022 முதல் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் தொடக்கம் முதலே நடித்துவரும் நடிகைகளில் சத்யப்பிரியாவும் ஒருவர்.

சத்யப்பிரியா - திருச்செல்வம்

எதிர்நீச்சல் தொடரை இயக்குநர் திருமுருகன் இயக்கிவருகிறார். திருமுருகன் முன்பு இயக்கிய கோலங்கள் தொடரிலும் நடிகை சத்யப்பிரியா நாயகி தேவையானியின் தாயாக நடித்திருந்தார்.

கடந்த 2003 முதல் சின்னத்திரை தொடர்களில் நடிகை சத்யப்பிரியா நடித்து வருகிறார். ராஜ் தொலைக்காட்சியின் இதோ பூபாலம் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, கோலங்கள், வம்சம், சித்திரம் பேசுதடி, மகாலட்சுமி, அவளும் நானும் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

எதிர்நீச்சல் குடும்பத்துடன் சத்யப்பிரியா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் திரைப்படங்களில் நாயகியாக நடித்த சத்யப்பிரியா, குணச்சித்திர வேடங்களிலும், வில்லியாகவும் நடித்துள்ளார். பல தெலுங்கு படங்களுக்கு பின்னணிக் குரல் கலைஞராகவும் பணிபுரிந்துள்ளார்.

பல்லேசீமா - சத்யப்பிரியாவின் தெலுங்குப் பட போஸ்டர்

தற்போது முழுக்க முழுக்க சின்னத்திரையில் நடித்துவரும் சத்யப்பிரியா, இன்று 72வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் தொடர் - சக நடிகர், நடிகைகளுடன் சத்யப்பிரியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT