தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் இயக்கி, நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ’தென் மாவட்டம்’ எனப் பெயரிட்டுள்ளார்.
இதன் அறிவிப்பு போஸ்டர் நேற்று (மார்ச்.4) வெளியானது. இதில், இசை - யுவன் சங்கர் ராஜா எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பணமோசடி, ஆதிக்க சாதி ஆதரவு மனநிலை கொண்டவர் உள்ளிட்ட விவகாரங்களில் ஆர்.கே.சுரேஷ் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஆர்.கே.சுரேஷின் தென் மாவட்டம் படத்தில் யுவன் இசையமைக்கிறார் என்கிற அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் யுவன் சங்கர் ராஜா, ‘இந்தப் படத்தில் நான் இசையமைக்க ஒப்பந்தமாகவில்லை’ எனக் கூறினார்.
இதைப் பகிர்ந்த ஆர்.கே.சுரேஷ், “ வணக்கம் யுவன் சார். நீங்கள் இந்தப் படத்திற்காகவும் இசை நிகழ்ச்சிகாகவும் கையெழுத்திட்டீர்கள். தயவுசெய்து, ஒப்பந்தத்தை மீண்டும் சரிபாருங்கள்” என தெரிவித்துள்ளார்.
இதனால், ரசிகர்கள் ஆர்.கே.சுரேஷை விமர்சித்து வருகின்றனர். ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள ‘காடுவெட்டி’ விரைவில் திரைக்கு வரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.