நடிகர் மம்மூட்டி நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கடந்த பிப்.15 ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரம்மயுகம்.
மாந்திரீகத்தை மையமாகக் கொண்டு ஹரார் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியிருந்தது. கொடுமன் போற்றி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் மம்மூட்டி.
இப்படம், உலகளவில் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இப்படம் வருகிற மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.