DOTCOM
செய்திகள்

ஏகே - 63 அப்டேட்!

நடிகர் அஜித் குமார் நடிக்கவுள்ள புதிய படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

துணிவு படத்தைத் தொடர்ந்து  நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

விடாமுயற்சி படத்திற்குப் பின் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் புதிய தகவல் வெளியாகியிருந்தது. 

பொங்கல் அன்று இப்படத்திற்கான அலுவலக பூஜை சென்னையில் நடந்ததாகக் கூறப்பட்டது. குறிப்பாக, தயாரிப்பாளர் தனஞ்செயன் நேர்காணல் ஒன்றில் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தை வைத்து இயக்குவதைத் தன்னிடம் கூறியதாகச் சொன்னார். இதனால், அஜித் - ஆதிக் கூட்டணி உறுதியாகியுள்ளது.

தற்போது, இப்படத்தின் பெயர் அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க் ஆண்டனி வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் இணைய உள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏரி கால்வாய் உடைந்து ஊருக்குள் புகுந்த நீர் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள்!

பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது

கோவையில் ரயிலைக் கவிழ்க்க சதி: மூவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

கரூர் பலி: விஜய்யை சந்திக்க சென்னை புறப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்!

மகாராஷ்டிர பெண் மருத்துவா் தற்கொலை: உதவி ஆய்வாளா் கைது

SCROLL FOR NEXT