செய்திகள்

தாயாகப் போவதை அறிவித்த பாக்கியலட்சுமி தொடர் நடிகை!

தான் தாயாகப் போவதாக பாக்கியலட்சுமி தொடர் நடிகை ரித்திகா அவருடைய ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

DIN

தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ரித்திகா, சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா, தொடர்ந்து பாக்கியலட்சுமி, சாக்லெட் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்டு சுற்றில் நுழைந்த ரித்திகா, சில வாரங்களில் வெளியேறினாலும், இந்நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களிடையே மிகவும்ம் பிரபலமடைந்தார்.

இதனிடையே ரித்திகா, வினு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு இவர் நடித்துக்கொண்டிருந்த பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகினார்.

இவர் இன்ஸ்டாகிராமில் அவ்வபோது புகைப்படங்களை வெளியிடுவார். இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில், நடிகை ரித்திகா தனது இன்டாகிராம் பக்கத்தில், தான் தாயாகப் போவதை சூசகமாகத் தெரிவித்து, புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

தாயாகப் போகும் ரித்திகாவிற்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT