DOTCOM
செய்திகள்

டப்பிங் பணியில் கவுண்டமணி!

நடிகர் கவுண்டமணி 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

DIN

சிறிய இடைவெளிக்குப் பின் கவுண்டமணி நடித்து வந்த 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இப்படத்தில் நடிகர்கள் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடித்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

தற்போது, இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், கலந்துகொண்ட நடிகர் கவுண்டமணி 8 மணி நேரம் தொடர்ந்து டப்பிங் பேசியுள்ளார்.

தற்கால அரசியலை தனக்கே உரிய பாணியில் நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும் அவருடன் நெருக்கமாக பயணிக்கும் பாத்திரத்தில் யோகி பாபுவும் நடித்துள்ளனராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

மின்னணு பயண அனுமதி: கட்டாயமாக்கியது இலங்கை

SCROLL FOR NEXT