செய்திகள்

கங்குவா டீசர் தேதி அறிவிப்பு!

நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் புதிய டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

DIN

சிறுத்தை சிவா இயக்கும் 'கங்குவா' படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார்.  இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடித்துள்ளனர்.

அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

தற்போது, படத்தின் அடுத்தக்கட்ட பணிகளைப் படக்குழு துவங்கியுள்ளது. அதில் ஒரு பகுதியாக நடிகர் சூர்யா தன் டப்பிங் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்தாண்டு ஏப்ரல் வெளியீடாக திரைக்கு வர உள்ளதால் தயாரிப்பு நிறுவனம் படத்தின் பணிகளை முடிக்க தீவிரம் காட்டியுள்ளது.

இந்த நிலையில், கங்குவா படத்தின் புதிய டீசரை நாளை (மார்ச்.19) மாலை 4.30 மணிக்கு வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை மாநகராட்சியில் அரையாண்டு வரி: ரூ.1,350 கோடி இலக்கு; இதுவரை ரூ.900 கோடி வசூல்

மின்வாரியத்துக்கு களங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: மின்வாரிய தலைவா் எச்சரிக்கை

செப். 28 வரை பெண்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனை

காவல்கிணறில் பைக் மீது காா் மோதல்: கேரள இளைஞா் பலி

சென்னை காவல் ஆணையரகத்தில் எஸ்ஐ மயங்கி விழுந்து உயிரிழப்பு

SCROLL FOR NEXT