செய்திகள்

1 மணி நேரத்திற்கு 5 லட்சம்: சந்திக்க வரும் ரசிகர்களுக்கு கட்டணம்!

DIN

ஹிந்தி சினிமாவில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்பவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளது.

இவர் இயக்கத்தில் வெளிவந்த, ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ்’, ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றது. தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். லியோவிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், அனுராக் காஷ்யப் இண்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சினிமா தொடர்புடைய நபர்களுக்கு உதய முயற்சித்து என்னைடைய நேரத்தை வீணடித்து விட்டேன். மேதாவிகள் என நினைக்கும் நபர்களை சந்தித்து என்னுடைய நேரத்தை செலவிட நான் விரும்பவில்லை.

ரசிகர்கள் என்னை யாரவது சந்திக்க விரும்பினால் 10-15 நிமிடங்களுக்கு 1 லட்சம், 30 நிமிடங்களுக்கு 2 லட்சம், 1 மணி நேரத்துக்கு 5 லட்சம் என கட்டணம் நிர்ணயித்துள்ளேன்.

என்னை அழைக்கவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ வேண்டாம், பணம் செலுத்துங்கள் உங்களுக்கான நேரம் கிடைக்கும். நான் தொண்டு நிறுவனம் அல்ல. மக்கள் குறுக்கு வழியை தேடுவதால் நான் சோர்வடைந்து உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் அடுத்த படமான ‘கென்னடி’ விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கு: ரேவண்ணாவுக்கு ஜாமீன்

நூல் அரங்கம் : வரப்பெற்றோம்

இன்று நான்காம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 96 தொகுதிகள் யார் பக்கம்?

"என் அப்பாவுக்கும் நடிக்கணும்னு ஆசை! நான் அந்த கனவை சாதிச்சுட்டேன்”: நடிகை கீதா கைலாசம் - நேர்காணல்

மாயா ஒன் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT