திருமணம் எப்போது? ஸ்ருதிஹாசன் பதில்!
திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார்.
ராஜ்கமல் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் வரிகளில் நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்த ‘இனிமேல்’ பாடலில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார்.
இந்த விடியோ நேற்று வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
Advertisement
Advertisement
அப்போது, நடிகை ஸ்ருதிஹாசனிடம், “எப்போது உங்களுக்குக் கல்யாணம்”? எனக் கேள்வியெழுப்பட்டது.
அதற்கு சிரித்தபடியே, “தெரியவில்லை” என ஸ்ருதி பதிலளித்தார்.
நடிகை ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹசாரிகா என்பவரைக் காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.