செய்திகள்

வசூல் சாதனை படைத்த ‘க்ரூ’ திரைப்படம்!

நடிகைகள் தபு, கரீனா கபூர், கிருத்தி சனோன் நடித்துள்ள க்ரூ திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது.

DIN

தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தபு தெலுங்கு, ஹிந்தியிலும் அதிக படங்களில் வந்தார். அவருக்கு 50 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த வயதிலும் தபுவின் அழகு குறையவில்லை என்று அவரது ரசிகர்கள் வியக்கிறார்கள்.

தெலுங்கில் அறிமுகமான நடிகை கிருத்தி சனோன் தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுடன் நடித்தார். கிருத்தி சனோன் நடிப்புக்காக மிமி படத்துக்காக தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

கிருத்தி சனோன் நடிகைகள் தபு, கரீனா கபூர் உடன் இணைந்து க்ரூ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தினை ராஜேஷ் கிருஷ்ணன் இயக்குகியுள்ளார். இதன் டிரைலர் 50 மில்லியனுக்கும் (5 கோடி) மேல் பார்வைகளைப் பெற்று கவனம் ஈர்த்தது.

ஏக்தா கபூர், ரேகா கபூர் இந்தப் படத்தினை தயாரித்துள்ளார்கள். இந்தப் படத்தின் ஹோலியை முன்னிட்டு மார்ச் 29ஆம் நாள் வெளியானது.

இந்நிலையில் இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி முதல்நாளில் ரூ.20.07 கோடி வசூலித்துள்ளது.

பெண்களை முன்னிலைப்படுத்தி வெளியான ஹிந்தி திரைப்படங்களில் முதல்நாளில் இதுதான் அதிகம் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT