செய்திகள்

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

இயக்குநர் நெல்சன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் இன்று மாலை அறிவிக்கிறார்கள்.

DIN

இயக்குநர் நெல்சன் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் படங்களை இயக்கினார்.

ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது.

இவர் அடுத்ததாக, ஜெயிலர் - 2 படத்தை இயக்கும் திட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதை அறிவித்துள்ளார்.

இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதல்படத்தை வருகிற இன்று (மே - 3 ) மாலை 6 மணிக்கு அறிவிக்கிறார்கள்.

நெல்சன் நான் நினைத்த மாதிரியான படங்களை சினிமாவில் எடுக்க முடியவில்லை எனக் கூறியிருந்தார். அவரே தயாரித்து இயக்குகிறார அல்லது மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கிறார் எனப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்நிலையில் அவரது தயாரிப்பில் எப்படியான படங்கள் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிடிஇஏ பள்ளியில் தமிழ் கலை இலக்கியப் பெருவிழா

மோடி பிறந்த நாளில் தில்லியில் 41 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகங்கள் திறப்பு

மேம்பட்ட மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை: தில்லி முதல்வா்

டியுஎஸ்யு தோ்தல் பிரசாரத்தின்போது ஏபிவிபி, என்எஸ்யுஐ அமைப்பினா் மோதல்

தில்லி பிஎம்டபிள்யு விபத்து: முக்கிய குற்றவாளி மது அருந்தவில்லை என பரிசோதனையில் தகவல்

SCROLL FOR NEXT