FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

நடிகர் ஃபஹத் ஃபாசில் நடித்த ஆவேஷம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றிப்படமாகியுள்ளது.

Updated On : 7 மே 2024, 2:47 pm IST
பகிர்:

ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த படம் ஆவேஷம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஃபஹத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது.

பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனைச் (ஃபகத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கவனம் பெற்றது. குறிப்பாக, இலுமினாட்டி பாடலின் இசையும் வரிகளும் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

அமேசான் ஓடிடியில் மே.9ஆம் தேதி வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவே, நடிகர் ஃபஹத் ஃபாசிலின் அதிகம் வசூலித்த படமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments