செய்திகள்

‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியின் 9 போட்டியாளர்கள்!

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் வாரம்தோறும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

DIN

சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் நடுவராக பங்கேற்கும் ’டாப் குக் டூப் குக்கு’ என்ற சமையல் நிகழ்ச்சியின் 9 போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை(மே 19) முதல் வாரம்தோறும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 9 போட்டியாளர்கள் 3 அணிகளாக பிரிந்து போட்டியிடவுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ 5-வது சீசனில் இருந்து விலகுவதாக செஃப் வெங்கடேஷ் பட் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளிட்ட விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வந்த மீடியா மேசன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் அந்த தொலைக்காட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

இந்த நிலையில், மீடியா மேசன்ஸ் நிறுவனமும் சன் தொலைக்காட்சியும் இணைந்து தயாரிக்கும் ‘டாப் குக் டூப் குக்கு’ என்ற புதிய சமையல் நிகழ்ச்சி அடுத்த வாரம் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் நடுவராக வெங்கடேஷ் பட் செயல்படவுள்ளார். டூப் குக்குகளாக விஜய் டிவி மூலம் பிரபலமான பரத், தீனா, தீபா, மோனிஷா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் குக்குகள் குறித்த ப்ரோமோவை சன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

நடிகர்கள் சாய் தீனா, ஃபெப்சி விஜயன், சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, சிங்கம் புலி, சுஜாதா சிவக்குமார், சைத்ரா ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மேலும், பாடகி பின்னி கிருஷ்ணகுமார், ஷாலி நிவேகாஸ், நரேந்திர பிரசாத் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT