இயக்குநர் மந்திரமூர்த்தி, நடிகர் சசிகுமார். 
செய்திகள்

மீண்டும் இணைந்த அயோத்தி கூட்டணி!

நடிகர் சசிகுமார், இயக்குநர் மந்திரமூர்த்தி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.

DIN

இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார், புகழ், பிரீத்தி அஸ்ராணி நடிப்பில் வெளியான திரைப்படம் அயோத்தி. மத நல்லிணக்கத்தையும் மனிதர்களின் மேன்மையையும் மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. நீண்ட இடைவேளைக்குப் பின் நடிகர் சசிகுமாருக்கும் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது.

இந்த நிலையில், இயக்குநர் மந்திரமூர்த்தி கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை இயக்குவார் என அறிவிப்பு வெளியானது.

தற்போது, இந்தப் படத்தில் நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தி வெற்றியைத் தொடர்ந்து இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT