நடிகை சுசித்ராவின் நேர்காணலொன்று கடந்த திங்கள்கிழமை வெளியானது. அதில், தன் முன்னாள் கணவரும் நடிகருமான கார்த்திக் குமார் குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, நடிகர் தனுஷும் கார்த்திக் குமாரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் எனக் கூறினார்.
இந்த நேர்காணலைக் கண்டு அதிர்ச்சியடைந்த தனுஷ் ரசிகர்கள் சுசித்ராவைக் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். முக்கியமாக, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
அதேநேரம், சுசித்ரா கூறியதில் உண்மை இருக்கலாம் என்கிற ரீதியில் பலரும் தனுஷ் மற்றும் கார்த்திக் குமாரைக் கிண்டலடித்து வருவதுடன் இருவரையும் விமர்சித்து வருகின்றனர்.
தொடர்ந்து, இன்னொரு நேர்காணலையும் அளித்தார். அதில், நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் தனக்கு தொல்லை கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். இதனால், சமூக வலைதளங்களில் சுசித்ரா வைரலானதுடன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தன் சுசித்ரா புதிய விடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “நான் நேர்காணலில் சொல்வதை பல யூடியூப் சேனல்கள் தவறுதலாகத் திரித்து வெளியிடுகின்றனர். இனி, என் யூடியூப் சேனலில் மட்டும் பேசுவேன். இதில், சினிமா மற்றும் தத்துவம் சார்ந்த விடியோக்களை வெளியிட திட்டம். அதனால், இனி எந்த யூடியூப் சேனல்களிலும் இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.