செய்திகள்

‘ஸ்ரீதேவிக்கு பிடித்த இடம்’: சென்னையில் ஜான்வி கபூர்!

நடிகை ஜான்வி கபூர் சென்னையில் உள்ள முப்பாத்தம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார்.

DIN

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் பெற்று வருகிறார். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

தெலுங்கில் ஜூனியர் என் டிஆர் உடன் தேவரா படத்தில் நடித்து வருகிறார். தற்போது, இவர் நடித்து முடித்துள்ள மிஸ்டர் & மிஸ்ஸஸ் மஹி (Mr and Mrs Mahi) திரைப்படம் வரும் மே.31 அன்று வெளியாகிறது. இதற்கான, புரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

நேற்று (மே.26) ஐபிஎல் இறுதிப்போட்டியைக் காண சென்னை வந்தவர், இன்று முப்பாத்தம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.

இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “முதல்முறையாக முப்பாத்தம்மன் கோவிலுக்கு வருகிறேன். அம்மா சென்னை வரும்போதெல்லாம் அவருக்குப் பிடித்த இடம் இதுதான்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT