முகப்பு
செய்திகள்

‘மாயி' பட இயக்குநர் சூரிய பிரகாஷ் காலமானார்

Updated On : 27 மே, 2024 at 10:53 AM
பகிர்:
Updated On : 27 மே, 2024 at 10:52 AM

மாயி படத்தின் இயக்குநர் சூரிய பிரகாஷ் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் திரைப்படத்தின் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் கேவி.பாண்டியன். அதன் பிறகு தன்பெயரை சூரிய பிரகாஷ் என மாற்றிக்கொண்டு மாயி, திவான், அதிபர், வருஷநாடு ஆகிய படங்களை இயக்கினார். இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

Advertisement

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.