செய்திகள்

டிஆர்பியில் எதிர்நீச்சலை பின்னுக்குத் தள்ளிய பிரபல தொடர்! இந்த வார டிஆர்பி!

இந்த வாரம் ரசிகர்களுக்கு பிடித்த முதல் 10 தொடர்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

DIN

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களே டிஆர்பி பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், இந்த வாரம் ரசிகர்களுக்கு பிடித்த முதல் 10 தொடர்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

சன் டிவியின் சிங்கப் பெண்ணே தொடர் 9.27 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கயல் சீரியல் 9.09 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் 8.14 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

வானத்தைப் போல தொடர் 7.64 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. பாக்கியலட்சுமி தொடர் 7.45 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 5வது இடத்தை பெற்றுள்ளது.

கடந்த வாரங்களில் முதல் 5 இடங்களில் இருந்த எதிர்நீச்சல் தொடர், இந்த வாரம் 7.28 டிஆர்பி புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

சுந்தரி தொடர் 7.10 டிஆர்பி புள்ளுடன் 7வது இடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 6.29 டிஆர்பி புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளது.

புதிதாக ஆரம்பித்த தொடர்களான மல்லி மற்றும் சின்ன மருமகள் தொடர்கள் முறையே 5.89 டிஆர்பி புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தையும், 5.70 டிஆர்பி புள்ளிகளுடன் 10வது இடத்தையும் பிடித்துள்ளன.

வழக்கமாக முதல் 3 இடங்களை சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களே பிடித்துவிடும். இம்முறை முதல் முறையாக டாப் 3-க்கு சிறகடிக்க ஆசை தொடர் முன்னேறியுள்ளது.

எப்போதும்போல சன் டிவியின் சிங்கப் பெண்ணே தொடர், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT