முகப்பு
செய்திகள்

சூது கவ்வும் 2: ‘பேட் பாய்ஸ்’ பாடல் வெளியானது!

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி வரும் சூது கவ்வும் பாகம் 2.

Updated On : 29 மே, 2024 at 4:55 AM
பகிர்:

சூது கவ்வும் 2 படத்தின் புதிய பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2013ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது. இதில் சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்து உள்ளார். படத்தின் முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கி இருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே. அர்ஜுன் இயக்குகிறார்.

இந்த படத்தில் ஹரிஷா, ராதாரவி, கருணாகரன், எம்எஸ் பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், பேட் பாய்ஸ் மிஷன் என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத், இப்பாடலை எழுதி பாடியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →