நடிகை தீபிகா படுகோன் 
செய்திகள்

மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்!

தீபிகா படுகோனின் மகளின் பெயர்...

DIN

நடிகை தீபிகா படுகோன் தன் மகளின் பெயரை அறிவித்துள்ளார்.

நடிகை தீபிகா படுகோன் 2018-ல் நடிகர் ரன்வீர் சிங்கைத் திருமணம் செய்துகொண்ட பின்பும் பல படங்களில் நடித்தார். இறுதியாக கல்கி வெளியானது. கருவுற்ற பின் கல்கியின் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்துகொண்டு வைரலானார்.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் குழந்தை பிறக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி அன்று மும்பையிலுள்ள பிரபல மருத்துவமனையில் பிரசவத்திற்காக தீபிகா படுகோன் அனுமதிக்கப்பட்டார்.

பின், ஒருநாள் கழித்து தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்ததை தீபிகாவும் ரன்வீரும் இணைந்து அறிவித்தனர்.

இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு தன் மகளுக்கு, ‘துவா படுகோன் சிங்’ எனப் பெயரிட்டுள்ளதாக தீபிகா அறிவித்துள்ளார். துவா என்றால் பிராத்தனை என்றும் தங்களின் பிராத்தனையின் பதில் என்பதால் குழந்தைக்கு இப்பெயரை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரக்கு ஆட்டோ மோதி மினி பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து தொடக்கம்!

ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது; அருவிகளில் குளிக்க அனுமதி

ஒசூரில் பூக்களின் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிருஷ்ணகிரி கிளை இடமாற்றம்

SCROLL FOR NEXT