செய்திகள்

அதிகரிக்கும் காட்சிகள்... லக்கி பாஸ்கர் வசூல் இவ்வளவா?

லக்கி பாஸ்கர் வசூல் அறிவிப்பு...

DIN

நடிகர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்த திரைப்படம் லக்கி பாஸ்கர். தீபாவளி வெளியீடாக அக். 31 வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவான இப்படம், தெலுங்கு மற்றும் மலையாளத்தை முதன்மையாகக் குறிவைத்து உருவானாலும் தமிழிலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

முக்கியமான, சென்னையில் படம் வெளியான முதல் நாளைவிட தற்போது கூடுதலாகக் காட்சிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. பிரதர் மற்றும் பிளடி பெக்கர் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அப்படத்தின் திரைகளை அமரனும் லக்கி பாஸ்கரும் நிரப்பும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் முதல் இரண்டு நாள்களில் உலகளவில் ரூ. 26.2 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT